முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

TNPSC Group II (Interview Post)!

TNPSC Group II (Interview Post)! 🔐 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அனைத்துத் தேர்வுகளுக்கும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையுள்ள சமச்சீர்க் கல்வி பாடப் புத்தகங்களே ஆதார நூல்களாகும். அதனோடு பொது அறிவு, நாட்டு நடப்பு, அறிவியல், விளையாட்டு, அரசியல், அரசாங்கம், பொருளாதாரம் போன்ற பல்துறை சார்ந்த பொது அறிவினையும் வளர்த்துக் கொள்ளவேண்டும். 🔐 இன்றைய தொகுப்பில் நாம் காணவிருப்பது பல்வேறு பணிகளைக் கொண்ட குரூப் 2 தேர்வும் அதன் நோக்கமும் ஆகும். தேர்வு வாரியம் - தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தேர்வு - Group II (Interview Post)  பணியின் பெயர் 1. துணை வணிகவரி அதிகாரி 2. சார்-பதிவாளர் 3. சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி 4. உதவி தொழிலாளர் ஆய்வாளர் 5. இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் (பொது) 6. இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் (மாற்றுத் திறனாளிகள்) 7. லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவியாளர் 8. டிஎன்பிஎஸ்சி உதவி பிரிவு அதிகாரி 9. உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி ஆய்வாளர் 10. இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை தணிக்கை ஆய்வாளர் 11. தொழில் கூட்டுறவு சங்க மேற்பார்வையா...

Crazy Gift from Angel |Tamil story| Ocean of Lectures |

தேவதை கொடுத்த பரிசு   ஒரு கிராமத்தில் இரண்டு மீனவர்கள் நண்பர்களாக இருந்தனர். ஒரு நண்பரின் பெயர் மதன். மற்றவன் பெயர் குணா. இருவரும் தினமும் காலை நேரத்தில் கட்டு மரத்தில் ஏறி, மீன் பிடிக்கச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.   ஒருநாள் காலை நேரத்தில் இருவரும் வழக்கம் போல் மீன் பிடிக்கச் சென்றனர். அன்றைய தினம் மாலை நேரம் ஆகியும் கூட இருவர் வலையிலும் போதுமான மீன்கள் சிக்கவில்லை. மிகக் குறைந்த அளவிலேயே மீன்கள் மாட்டின. கரையை அடைந்த இருவரும் தங்களுக்குக் கிடைத்த மீனைப் பங்கிட்டுப் பார்த்தனர்.   நண்பனே! இந்த மீன்களை விற்று அதில் கிடைக்கும் பணத்தில் நம் இருவர் குடும்பத்திற்கும் போதிய உணவுப்பொருட்களை வாங்கிச் சமைப்பது கடினம். அதனால், மீன் விற்றுக் கிடைக்கும் பணத்தினை நம்மில் ஒருவரே எடுத்துக் கொள்ளலாம் என்றான் குணா.   அப்படியானால் நீயே எடுத்துக்கொள். நீதான் மனைவி, மக்களோடு இருக்கிறாய். உன் குடும்பத்தை வறுமையில் வாடவிடாதே. நீயே எடுத்துக்கொள் என்றான் மதன். இல்லை நண்பனே. உன் குடும்பத்தில் இரண்டு நபர்கள் அதிகமாக இருக்கின்றனர். அதனால் நீதான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றான் குணா. ...

GIFT FOR LOVE |Tamil Story|Tamil solai|

அன்பு பரிசு  ஒரு திருமண நாளில் எங்கள் திருமணத்திற்கு வந்த பரிசுகளை பட்டியலிட்டுக் கொண்டிருந்தோம். நண்பரொருவர் தந்த ஒரே மாடலில் அமைந்த டைட்டன் வாட்சுகள் தான் பட்டியலில் முதலில் இருந்தது. இவர்கள் கணவன், மனைவி என்று எல்லோருக்கும் அடையாளம் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் ஒரே மாடலில் வாங்கிக் கொடுத்தீர்களா? என்றேன்.   லேடீஸ் வாட்ச் அளவில் சிறியது. ஜென்ட்ஸ் வாட்ச் அளவில் சற்று பெரியது. ஆனால் மாடல் பார்ப்பதற்கு ஒன்றாகத்தான் இருக்கிறது. அது செய்யும் வேலையும் கூட ஒன்று தான். எனவே நம்மிடம் சில ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும், நாம் எப்போதும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் உங்களுக்கு இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இதை பரிசாக தேர்ந்தெடுத்தேன் என்றார் நண்பர்.   எல்லோரும் இப்படி ஏதேனும் ஒரு அர்த்தத்தோடுதான் பரிசு கொடுத்தார்களா? என்று தெரியவில்லை. கடமைக்காக தரப்படுகிற பரிசுகளும்கூட உண்டு. எஸ். எம். எஸ்ஸை ஃபார்வேர்டு செய்வது போல சிலர் பரிசுகளை அப்படியே ஃபார்வேர்டு செய்வதுண்டு. ஒரு முறை பரிசின் கீழ் ஒருவர் பெயரும், பின்பக்கத்தில் ஒருவர் பெயரும் இருந்தது. பிறகுதான் அது...

அன்பின் வடிவம் :

ஓர் இளம் தாய் தெரு வழியாகச் சென்று கொண்டிருக்கிறாள். அவளைப் பார்த்து ஒரு நாய் குரைக்கிறது. அவள் பயந்து அருகிலுள்ள வீட்டில் தஞ்சம் புகுகிறாள். மறுநாள் அதே தாய் தன் குழந்தையுடன் சென்று கொண்டிருக்கிறாள். திடீரென ஒரு சிங்கம் அவள் குழந்தையின் மீது பாய்கிறது. அவள் அப்போது என்ன செய்வாள்? சிங்கத்தின் வாயில் தன்னை அர்ப்பணித்தாவது அவள் குழந்தையைக் காப்பாற்றுவாள் அல்லவா? இவ்வுதாரணத்தைக் கூறி சுவாமி விவேகானந்தர் உண்மையான அன்பின் இலக்கணத்தை விளக்குகிறார்: அன்பு பயம் அறியாதது. பயத்திற்குக் காரணம் சுயநலநோக்கம் தான். சுயநலத்திற்கும், சிறுமைத்தனத்திற்கும் அடிமைப்படும் அளவிற்கு பயம் அதிகரிக்கிறது. தான் ஒன்றுக்கும் உதவாதவன் என்று ஒருவன் நினைப்பானேயானால் பயம் அவனைப் பற்றிக் கொள்வது நிச்சயம். தான் அற்பன் என்ற எண்ணம் குறையக் குறைய பயமும் குறையும். துளியளவு பயம் இருந்தால்கூட அங்கே அன்பு இருக்க முடியாது. அன்பும், பயமும் இணைந்து இருக்க முடியாதவை. கடவுளை நேசிப்பவன் அவரிடம் பயப்படக்கூடாது. பயத்தின் காரணமாக இறைவனை நேசிப்பவர்கள் மனிதர்களில் கடைப்பட்டவர்கள்.; பக்குவப்படாதவர்கள். தண்டனை கிடைக்கும் என்ற பயத்தினால் இவ...

பக்தி பற்றி பலரும் அறியாத உண்மைகள்:

அன்பிலும், இதயத்தின் தூய்மையான பக்தியிலும்தான் மதம் வாழ்கிறதே தவிர, சடங்குகளில் மதம் வாழவில்லை. ஒருவன் உடலும் மனமும் தூய்மையாக இல்லாமல், கோயிலுக்குச் செல்வதும் சிவபெருமானை வழிபடுவதும் பயனற்றவை. உடலும் மனமும் தூய்மையாக இருப்பவர்களின் பிரார்த்தனைகளை சிவபெருமான் நிறைவேற்றுகிறார். ஆனால், தாங்களே தூய்மையற்றவர்களாக இருந்துகொண்டு, பிறருக்கு மதபோதனை செய்பவர்கள் இறுதியில் தோல்வியே அடைகிறார்கள். புற வழிபாடு என்பது, அக வழிபாட்டின் அடையாளம் மட்டுமே ஆகும். அக வழிபாடும் தூய்மையும்தாம் உண்மையான விஷயங்கள். இவையின்றிச் செய்யப்படும் புற வழிபாடு பயனற்றது. இதை நீங்கள் மனத்தில் பதிய வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். நாம் எதை வேண்டுமானாலும் செய்யலாம்; பிறகு ஒரு திருத்தலத்திற்குச் சென்றால், அந்தப் பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டுவிடும் என்று நினைக்கும் அளவிற்குக் கீழான நிலைக்கு, இந்தக் கலியுகத்தில் மக்கள் வந்துவிட்டார்கள். தூய்மையற்ற உள்ளத்துடன் கோயிலுக்குச் செல்லும் ஒருவன், ஏற்கெனவே தன்னிடம் இருக்கும் தன் பாவங்களுடன் மேலும் ஒன்றை அதிகப்படுத்துகிறான்; கோயிலுக்குப் புறப்பட்டபோது இருந்ததைவிட, இன்னும் மோசமானவன...

சுவாமி விவேகானந்தரும் அவரது சகோதரத் துறவிகளும்

அபய்பாபு: சுவாமி விவேகானந்தரும் அவரது சகோதரத் துறவிகளும் எதற்கு அவ்வளவு தவம் மேற்கொண்டார்கள்? ஸ்ரீராமகிருஷ்ணர்தான் ஏற்கனவே அவர்களையெல்லாம் சித்தியடைந்த வர்களாக உயர்நிலைக்கு அழைத்துப் போய்விட்டாரே! அப்படியிருந்தும், உணவு, தூக்கம் இவற்றையெல்லாம் துறந்து எதற்கு அவ்வளவு கடுமையான தவம் செய்தார்கள்? ம: கடவுளை அடைந்த பிறகும் அவர்கள் ஏன் தவம் செய்கிறார்கள் என்றால், தாம் பெற்ற இறையுணர்வைத் திடப்படுத்திக் கொள்வதற்காக என்பதுதான் பதில். புராணத்தில் படித்திருக்கி றோம், முசுகுந்த மகாராஜா இறையனுபவம் கிட்டிய பிறகும் தவம் மேற்கொண்டார் என்று. ஏன்? அந்த உயர் அனுபவ நிலைக்குப் பிறகும் அவருக்கு மனம் அமைதியற்றுச் சலித்துக் கொண்டே இருந்தது. அதனாலேயே அவருக்கு, தவம் செய் என்ற ஆணை கிடைத்தது. அலை பாய்வது மனதின் சுபாவம்; அதைத் தவத்தின் மூலம் அமைதிப்படுத்த முடியும்.இன்னொரு காரணம். இறையுணர்வை அனுபவத்தில் அடைந்த பின்னும் அதிலிருந்து சறுக்கி விழ வாய்ப்புண்டு. ஏன் தினமும் தியானம் செய்கிறீர்கள்? என்று ஸ்ரீராமகிருஷ்ணர், தமக்கு அத்வைத சாதனையைக் கற்றுத் தந்த குருவான தோதாபுரியைக் கேட்டார். அதற்கு தோதாபுரி, பாத்திரத்தைத் தினம...

பிச்சைக்காரனின் தன்னம்பிக்கை

பிச்சைக்காரனின் தன்னம்பிக்கை  ஒரு புகைவண்டி நிலையத்தில் பிச்சைக்காரன் ஒருவன் தனது கைப்பை நிறைய பென்சில்களை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான். ஒரு கணவான் அந்தவழியாகச் சென்றபோது 5 ரூபாய் நாணயத்தை பிச்சைக்காரனின் திருவோட்டில் போட்டார். பிறகு புகைவண்டியில் ஏறி அமர்ந்தார்.  அவரது மனதில் ஒரு கருத்து உதித்தது. எழுந்து வேகவேகமாக அதே பிச்சைக்காரனிடம் சென்று, அவனது பையிலிருந்த பென்சில்களை எடுத்துக்கொண்டு 5 ரூபாய்க்குச் சமமான பென்சில்களை எடுத்துக்கொள்கிறேன். என்ன இருந்தாலும் நீயும் தொழில் செய்கிறாய் அல்லவா? என்று கூறிவிட்டு புகைவண்டியில் தனது இருக்கைக்குத் திரும்பினார்.   ஆறு மாதங்களுக்குப் பிறகு அந்த கணவான் ஒரு விருந்தில் கலந்துகொள்ளச் சென்றார். அந்த விருந்தில் 6 மாதங்களுக்கு முன்னாலே இரயில்நிலையத்தில் பிச்சையெடுத்துக்கொண்டு இருந்தவனும் அமர்க்களமான கோட் மற்றும் டை சகிதமான உடையில் கனகச்சிதமான கணவானாக விருந்தில் பங்குகொள்ள வந்து இருந்தான். அவன் இந்தக் கணவானை அடையாளம் கண்டுகொண்டு இப்படிக்கூறினான்.   அன்பரே... நீங்கள் என்னை மறந்து போகியிருக்கலாம். ஆனால் நான் உங்களால்தான் இ...

Future India 2020 updates in Tamil

இந்தியா 2020  இந்தியாவை வரும் 2020-ம் ஆண்டுக்குள் வல்லரசாக்க வேண்டும் என்று அப்துல் கலாம் கனவு கண்டார். அதை நனவாக்கும் நோக்கத்தோடு இந்தியா 2020 என்ற நூலை அப்துல் கலாம் எழுதியுள்ளார். அதில் வல்லரசாகவும், முன்னேறிய நாடாகவும் இந்தியா மாற செய்ய வேண்டியவற்றை பட்டியலிட்டுள்ளார். ஒரு நாடு சிறந்த, வலிமையான நாடாக மாற வேண்டுமென்றால், கீழ்க்கண்ட துறைகளில் தன்னிறைவு காண வேண்டும் என வலியுறுத்துகிறார்.  1. வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல் 2. மருத்துவம் மற்றும் ஆரோக்கியம் 3. தகவல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்பம் 4. அடிப்படை கட்டமைப்பு, தடையற்ற மின்சாரம், சீரான சாலை போக்குவரத்து 5. மிகமுக்கிய உயர் தொழில் நுட்பத்தில் தன்னிறைவு  தற்போது ஆண்டுக்கு 1. 8% வளர்ச்சி கண்டு வரும் மக்கள் தொகைப் பெருக்கம் 2020-ல் 1. 5% ஆகக் குறையும். 1991ல் 52% என்று கணக்கிடப்பட்ட கல்வி அறிவு 80% ஆக உயரும். பொருளாதார நிலையிலும், சமூக உறவுகளிலும், கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் மத்தியில் கூட்டுறவு வளரும். வளர்ச்சியடைந்த இந்தியா என்கிற நிலையினை நமது தேசம் எட்டிவிடும். 1996- ன் விலை நிலவரத்தை வைத்துப் பார்க...

மூலிகைப் பயன்கள்

அருகம்புல் பொடி :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி  நெல்லிக்காய் பொடி :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது  கடுக்காய் பொடி :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.  வில்வம் பொடி :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது  அமுக்கலா பொடி :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.  சிறுகுறிஞான் பொடி :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.  நவால் பொடி :- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.  வல்லாரை பொடி :- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.  தூதுவளை பொடி :- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.  துளசி பொடி :- மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.  ஆவரம்பூ பொடி :- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.  கண்டங்கத்திரி பொடி :- மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.  ரோஜாபூ பொடி :- இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.  ஓரிதழ் தாமரை பொடி :- ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும்,   ஜ...

"History of India"in Tamil

கிமு 3500-1500 – சிந்து வெளி நாகரிகம் கிமு 1000 – கங்கை நதிக்கரையில் ஆரியர்கள் குடியேறுதல் கிமு 900 – மகாபாரதப் போர் கிமு 800 – இராயமாயனத்தின் முதல் பகுதி துவக்கம். மகாபாரதத்தின் முதல் பகுதி வங்காளத்திற்கு ஆரியர்கள் இடம் பெயர்தல் கிமு 550 – உபநிஷங்கள் தொகுப்பு கிமு 554 – புத்தரின் நிர்வாணம் கிமு 518 – பாரசீகர்களின் ஆதிக்கத்தில் இந்தியா கிமு 326 – அலெக்சாண்டர் இந்தியாவின் மீது படையெடுப்பு கிமு 321 – பாடலிபுரத்தில் சந்திரகுப்தர் மெளரிய வம்சத்தை நிறுவுதல் கிமு 272-232 – அசோகர் ஆட்சி கிமு 185 – புருஷ்யமித்திரன் சங்க சாம்ராஜ்யத்தை நிர்மாணித்தல் கிமு 58 – விக்கரம் ஆண்டு கிமு 30 – தெற்கில் பாண்டியர் சாம்ராஜ்யம் கிபி 40 – சாகர்கள் சிந்து பகுதியில் ஆட்சி கிபி 52 – புனித தாமஸ் இந்தியா வருகை கிபி 78 – சகா சகாப்தம் ஆரம்பம் கிபி 98-117 – கனிஷ்கரின் காலம் கிபி 320 – குப்த சாம்ராஜ்யம் உருவாதல் கிபி 380-143 – சந்திரகுப்த விக்கிரமாதித்தன் காலம், காளிதாசர் காலம், இந்து மதம் உயர்வடைந்தது கிபி 405-411 – பாகியான் வருகை கிபி 606 – ஹர்ஷவர்த்தனர் ஆட்சி கிபி 609 – சாளுக்கிய வம்சம் தோற்றம் கிபி 622 – ஹீஜிரா வரு...

ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க்கையின் மறுபக்கம்

 ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் நிறுவனத்தின் தலைவரும் தலைமை ஆட்சியரும், கணினித் துறையின் குறிப்பிடத்தக்க ஓர் ஆளுமையாளரும் ஆவார். இவர் பிப்ரவரி 24, 1955ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் 1985 ஆம் ஆண்டில், அமெரிக்க நாட்டரசு, அவர்களின் குடியரசுத் தலைவரால் வழங்கிப் பெருமை செய்யும் அந்நாட்டின் தலையாய பரிசாகிய தொழில்நுட்பத்துக்கும் புதுமையாக்கத்துக்குமான பதக்கத்தை வென்றார். ஸ்டீவ் ஜாப்ஸ், 1976 இல் ஆப்பிள் கம்பியூட்டர் நிறுவனத்தைத் தொடங்கியவர்களுள் ஒருவர். இவர் பிக்ஃசார் அசைபட நிறுவனத்தின் (Pixar Animation Studios) தலைமை ஆட்சியராகவும், வால்ட் டிசினி (Walt Disney) போன்ற பல நிறுவனங்களின் ஆட்சிப் பேராய இயக்குநர்களில் ஒருவராகவும் இருந்தார். ஆகஸ்ட் 24, 2011 அன்று உடல்நிலை காரணமாக தலைவர் பதவியிலிருந்து விலகினார். இவரையடுத்து டிம் குக் பொறுப்பேற்றார்.   ஸ்டீவ் ஜாப்ஸ், 1970களின் பிற்பகுதியில் இசுட்டீவ் வோசினியாக் மார்க் மார்குலா ஆகியோருடன் சேர்ந்து ஆப்பிள் நிறுவனத்தை நிறுவினார். 1980களின் முற்பகுதியில் ஆப்பிள் நிறுவனத்தின் திறம்மிக்க மாக்கிண்ட்டாசு கணினியை அறிமுகப்படுத்தினார். நிறுவன உள்பிணக்குகளால் 19...

சுந்தர் பிச்சை

 சுந்தர் பிச்சை என்று அறியப்படும் பிச்சை சுந்தரராசன் (பி. 12 சூலை 1972), ஓர் அமெரிக்க வாழ் கணினி தொழில்நுட்ப மேலாளர் ஆவார். இவரை கூகுளின் அடுத்த முதன்மை செயல் அலுவலராக ஆகஸ்ட் 10, 2015 அன்று கூகுள் அறிவித்தது. மைக்ரோசாஃப்டின் அடுத்த சி. இ. ஓ. பந்தயத்தில் இவரும் இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  தமிழ் நாட்டில் உள்ள சென்னையில் பிறந்த இவர், பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் படித்தவர். அதன் பிறகு ஐ. ஐ. டி. கரக்பூரில் பொறியியல் பட்டமும், ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் எம். எஸ் பட்டமும், பென்சில்வேனியாவில் இருக்கும் வார்டன் கல்லூரியில் எம். பி. ஏ. பட்டமும் பெற்றவர்.  2004-ம் ஆண்டு முதல் கூகுள் நிறுவனத்தில் பணிபுரிகிறார். தற்போது தலைமை துணைத்தலைவராக இருக்கும் இவர், ஆண்ட்ராய்ட், கூகுள் குரோம் உள்ளிட்ட பிரிவுகளைக் கவனித்துக்கொள்கிறார். 2013 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் நாள் ஆன்டி ரூபின் பதவி விலகிய பிறகு ஆண்ட்ராய்டு பிரிவிற்கும் சேர்த்து தலைவரானார். கூகுள் வரைபடம், ஆய்வு, வணிகம், விளம்பரம், ஆண்ட்ராய்டு, குரோம், உள்கட்டமைப்பு, கூகுள் ஆப்ஸ் ஆகியவற்றின் தலைவராக இருந்த இவர...

பில்கேட்ஸ்

 பில்கேட்ஸ் என்றால் உலகில் தெரியாதவர் எவரும் இல்லை. உலக பணக்காரர் வரிசையில் முதலிடத்தை பெற்றுள்ளவர். அது மட்டும் இல்லாமல் உலகின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகளாக முதல் இடத்தினைப் பெற்று வருகிறார். பில் கேட்ஸ் அவர்களின் முழு பெயர் வில்லியம் ஹென்றி கேட்ஸ்.   வில்லியம் ஹென்றி கேட்ஸ் அவர்கள் அமெரிக்காவின் சியாட்டில், வாஷிங்டம் நகரில் அக்டோபர் 28, 1955 அன்று பிறந்தார். இவரது பெற்றோர் வில்லியம் ஹெச். கேட்ஸ் - மேரி மேக்ஸ்வெல் ஆவர். இவரது தந்தை போற்றத்தகுந்த வழக்குரைஞராகவும் இருந்தார். இவரது தாய் யுனைடெட் வே மற்றும் இண்டர்ஸ்டேட் பேங்க் ச்ய்ச்டேமின் இயக்குநர் வாரியதில் பணியாற்றினார். மேலும் அவரது தாய் வழி தாத்தா நேஷனல் வங்கியின் தலைவராக இருந்தார். பில்கேட்ஸ் தனது பள்ளிப் படிப்பை ஒரு தொடக்கப் பள்ளியில் தொடங்கினார். கேட்ஸ் தன் பாலகர் படிப்பில் நல்ல முறையில் தேர்வானார். பின்னர், தன் பதிமூன்றாவது வயதில் சியாட்டிலில் பேர் வாய்ந்த, லேக்ஸைட் பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.   இவர் எட்டாம் வகுப்பு பயிலும் போது, லேக்சைட் பள்ளியில் ஒரு கணினி பயன்பாட்டுக்கா...

முகேஷ் அம்பானியின் அறியபடாத ரகசியங்கள்

 முகேஷ் அம்பானி என்று அழைக்கப்படும் “முகேஷ் திருபாய் அம்பானி” அவர்கள் இந்தியாவின் நவீனத் தொழில்துறை முன்னோடிகளில் குறிப்பிடத்தக்க ஒருவராவார். “இந்திய வர்த்தக உலக ஜாம்பவான்” எனப் போற்றப்படும் “திருபாய் அம்பானியின்” மகன் ஆவார். முகேஷ் அம்பானி அவர்கள், 1957 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள மும்பையில் திருபாய் அம்பானிக்கும் கோகிலாபென் அம்பானிக்கும் மூத்த மகனாகப் பிறந்தார். இவருக்கு அனில் அம்பானி என்ற சகோதரரும், தீப்தி சல்கோன்கர் மற்றும் நீனா கோத்தாரி என்ற இரண்டு சகோதரிகளும் உள்ளனர். இவருடைய சொந்த ஊர் ஜீனாகட் மாவட்டத்திலுள்ள சோர்வாட் ஆகும். முகேஷ் அம்பானியின் தந்தை திருபாய் அம்பானி அவர்கள் இந்தியாவின் தனியார்துறை நிறுவனங்களில் மிகவும் பெரிய நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை உருவாக்கியவர் ஆவார்.   தன்னுடைய ஆரம்பக் கால கல்வியை மும்பையில் உள்ள அபே மொரிச்சா பள்ளியில் தொடங்கி இவர், பின்னர் மும்பை பல்கலைக்கழகத்தில் இரசாயன பொறியியல் துறையில் பி. இ பட்டம் பெற்றார். அதன் பிறகு, இரண்டு ஆண்டு எம். பி. ஏ படிக்க அமெரிக்கா பயணமான ...