பில்கேட்ஸ் என்றால் உலகில் தெரியாதவர் எவரும் இல்லை. உலக பணக்காரர் வரிசையில் முதலிடத்தை பெற்றுள்ளவர். அது மட்டும் இல்லாமல் உலகின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகளாக முதல் இடத்தினைப் பெற்று வருகிறார். பில் கேட்ஸ் அவர்களின் முழு பெயர் வில்லியம் ஹென்றி கேட்ஸ்.
வில்லியம் ஹென்றி கேட்ஸ் அவர்கள் அமெரிக்காவின் சியாட்டில், வாஷிங்டம் நகரில் அக்டோபர் 28, 1955 அன்று பிறந்தார். இவரது பெற்றோர் வில்லியம் ஹெச். கேட்ஸ் - மேரி மேக்ஸ்வெல் ஆவர். இவரது தந்தை போற்றத்தகுந்த வழக்குரைஞராகவும் இருந்தார். இவரது தாய் யுனைடெட் வே மற்றும் இண்டர்ஸ்டேட் பேங்க் ச்ய்ச்டேமின் இயக்குநர் வாரியதில் பணியாற்றினார். மேலும் அவரது தாய் வழி தாத்தா நேஷனல் வங்கியின் தலைவராக இருந்தார். பில்கேட்ஸ் தனது பள்ளிப் படிப்பை ஒரு தொடக்கப் பள்ளியில் தொடங்கினார். கேட்ஸ் தன் பாலகர் படிப்பில் நல்ல முறையில் தேர்வானார். பின்னர், தன் பதிமூன்றாவது வயதில் சியாட்டிலில் பேர் வாய்ந்த, லேக்ஸைட் பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.
இவர் எட்டாம் வகுப்பு பயிலும் போது, லேக்சைட் பள்ளியில் ஒரு கணினி பயன்பாட்டுக்காக வாங்கபட்டது. மாணவர்களுக்கு கணினி பயன்று கொள்ள வசதியாக இருக்கும் என்பதே இதன் நோக்கம் ஆகும். கேட்ஸ் இதை நன்றாக பயன்படுத்தி கொண்டார். பில் கேட்ஸ் தனது முதல் கணினி நிரலை டிக்-டக்-டே விளையாட்டுக்காக எழுதினார். அது பயனாளர்களை கணினிக்கு எதிராக விளையாட வழி வகுத்தது. அவர் கணினியின்பால் பெரிதும் கவர்ந்து இழுக்கப்பட்டார். இவரது ஆர்வத்தை பார்த்து பள்ளி இவருக்கு கணித வகுப்பில் இருந்து விலக்கு அளித்தது. அதன் மூலம் இவரால் அதிக நேரம் கணினி பயிற்சியில் ஈடுபட முடிந்தது. ஆனால் கேட்ஸ் மற்றும் இதர மாணவர்கள் கணினியின் இயங்கு தளத்தில் (Operating system) உள்ள ஒட்டைகளைப் பயன்படுத்தி அதிகக் கணினி நேரத்தை உபயோகித்ததாக குறை கூறி தினசரி சில மணி நேர கணினி பயன்பாட்டு திட்டம் பயன்படுத்த தடை செய்யப்பட்டது. சிறு வயதிலேயே அவருக்கு நிரலாக்கத்தில் (programming) ஆர்வமிருந்ததால், தனது 13ஆம் வயதிலெயே நிரல்கள்(program) எழுதத் தொடங்கினார்.
பிறகு பில்கேட்ஸ் 1973 ஹாவர்டு பல்கலைகழகத்தில் சேர்ந்து படித்தார். அங்கு அவரது நண்பர் ஸடீவ் பால்மரின் வீட்டில் தங்கியிருந்தார். அங்கு இருந்த காலத்தில்தான் கணினிகளுக்கு மென்பொருள் எழுதப் பயன்படும் Basic என்ற மொழியை உருவாக்கினார். 2 ஆண்டுகள் கழித்து 1975ல் தன் நண்பன் ஃபால் எலனுடன் இணைந்து ஃமைக்ரோசாப்ட் என்ற நிறுவனத்தை தொடங்கினார். 1977-ஆம் ஆண்டு பட்டப்படிப்பை முடிக்காமலேயே ஹாபர்டை விட்டு வெளியேறி நிறவனத்தில் முழுக் கவனம் செலுத்தத் தொடங்கினார், இல்லக் கணினிகளுக்குத் தேவையான மென்பொருளை உருவாக்குவதில் இருவரும் கவனம் செலுத்தினர். 1981-ஆம் ஆண்டில் IBM கணினிகளுக்கான ஆளு-னுழுளு என்ற Operating System அதாவது இயங்குதளத்தை அறிமுகம் செய்தார். அதன் சிறப்பை எடுத்துக்கூறி மற்ற கணினி தயாரிப்பாளர்களையும் MS-DOS இயங்குதளத்தைப் பயன்படுத்துமாறு ஊக்கமூட்டினார் ஃபில்கேட்ஸ். அது ஏற்றுக்கொள்ளப்பட்டு 80களில் கணினிகள் பெருமளவில் விற்பனையாகத் தொடங்கின. ஒவ்வோரு கணினிக்கும் அதன் இயங்குதளத்திற்கான லைசென்ஸ் கட்டணம் கிடைப்பதால் ஃமைக்ரோசாப்ட்டின் வருமானம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது.
இக்காலகட்டத்தில் மைக்ரோசாப்ட் நவம்பர் 20, 1985 இல் மைக்ரோசாப்ட் விண்டோஸின் முதல் சில்லறை விற்பனை பதிப்பு வெளியிடப்பட்டது. மற்றும் ஆகஸ்டில் OS/2 என்ற ஐபிஎம் காண தனி இயங்குதள உருவாக்க ஒப்பந்தம் செய்தனர். பல சிக்கல்கலுக்கு பின்னர் OS/2 வின் பதிப்பு 1991 ஆம் ஆண்டில் முடிவடைந்தது.
பில் கேட்ஸ் ஜனவரி 1, 1994 ஆம் வருடம் மெலிண்டா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜெனிபர் காதரின், போஃப் அடேல் என்று இரு மகள்களும் ரோடி ஜான் என்ற ஒரு மகனும் உள்ளனர்.
1995 ஆம் வருடம் நவம்பர் மாதம் வெளியான தி ரோடு அஹெட் என்ற புத்தகத்தை இவருடன் சேர்ந்து மைக்ரோசாப்ட்டின் சிறப்பு தொழில்நுட்ப அலுவலரான நாதன் முர்வால்டும், பீட்டர் ரிநீர்சன் என்ற பத்திரிக்கையாளரும் எழுதியுள்ளனர்.
பில் கேட்ஸின் த ரோட் அகெட் எனும் நூல் 1995 ஆண்டு பிரசுரிக்கப்பட்டு பெரும் பாராட்டினைப் பெற்றது.
1999 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பிசினஸ் தி ஸ்பீட் ஆப் தாட் என்ற நூலை எழுதினார்.
2010 இல் எடுக்கப்பட்ட வெயிட்டிங் பார் தி சூப்பர்மேன், பிபிசி தயாரித்த ஆவணப்படமான தி வர்ச்சுவல் ரெவலுஷன் உட்பட பல ஆவணப்படங்களில் பில் கேட்ஸ் தோன்றியுள்ளார்.