TNPSC Group II (Interview Post)!

🔐 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அனைத்துத் தேர்வுகளுக்கும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையுள்ள சமச்சீர்க் கல்வி பாடப் புத்தகங்களே ஆதார நூல்களாகும். அதனோடு பொது அறிவு, நாட்டு நடப்பு, அறிவியல், விளையாட்டு, அரசியல், அரசாங்கம், பொருளாதாரம் போன்ற பல்துறை சார்ந்த பொது அறிவினையும் வளர்த்துக் கொள்ளவேண்டும்.


🔐 இன்றைய தொகுப்பில் நாம் காணவிருப்பது பல்வேறு பணிகளைக் கொண்ட குரூப் 2 தேர்வும் அதன் நோக்கமும் ஆகும்.


தேர்வு வாரியம் - தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)


தேர்வு - Group II (Interview Post) 


பணியின் பெயர்


1. துணை வணிகவரி அதிகாரி


2. சார்-பதிவாளர்


3. சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி


4. உதவி தொழிலாளர் ஆய்வாளர்


5. இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் (பொது)


6. இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் (மாற்றுத் திறனாளிகள்)


7. லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவியாளர்


8. டிஎன்பிஎஸ்சி உதவி பிரிவு அதிகாரி


9. உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி ஆய்வாளர்


10. இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை தணிக்கை ஆய்வாளர்


11. தொழில் கூட்டுறவு சங்க மேற்பார்வையாளர்


12. கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர்


13. வேளாண்மை விற்பனைத் துறை மேற்பார்வையாளர்


14. கைத்தறி ஆய்வாளர்


15. வருவாய் உதவியாளர்


16. பேரூராட்சி செயல் அலுவலர் (கிரேடு-2)


தேர்வு செய்யப்படும் முறை


முதல் நிலைத் தேர்வு


முதன்மைத் தேர்வு


நேர்காணல்


கல்வித்தகுதி - ஏதேனும் ஒரு துறையில் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.


வயது வரம்பு - 18 ஆண்டுக்கு மேல் இருக்க வேண்டும். (குறிப்பு : விண்ணப்பதாரர்களின் பிரிவு அடிப்படையில் தளர்வு அளிக்கப்படும்.)


ஊதியளவு - ரூ. 9300 - ரூ. 34800 + தர ஊதியம் ரூ. 4800 (மாதம்)


அதிகாரப்பு+ர்வ வளைதளம் - http://www.tnpsc.gov.in/


🔐 மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து வேலைவாய்ப்புகளுக்கும் பெரிய கல்வி தகுதி ஏதும் தேவை இல்லை. ஒரு பட்டப்படிப்பும் முறையான பயிற்சியும் இருந்தால், யார் வேண்டுமானாலும் இந்த தேர்வுகளில் வெற்றி பெற்று அரசுப் பணியில் அமரலாம். இத்தனை வாய்ப்புகள் இருப்பது பெரும்பாலான இளம் பட்டதாரிகளுக்கு தெரிவதில்லை.


🔐 இனியாவது உங்களை உயர் பதவி தேர்வுகளுக்குத் தயார் செய்து கொள்ளுங்கள். எல்லா உயர் பதவி தேர்வுகளுக்கும் தகுதி ஒரே ஒரு பட்டப்படிப்பு தான். எல்லாவற்றுக்கும் முறையான பயிற்சி தான் முக்கியம்.


🔐 நாளை நேர்காணலின்றி அரசுப் பணியில் அமரும் முறையைப் பற்றி காண்போம்.






 

கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! http://bit.ly/nithrajobsshare