முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க்கையின் மறுபக்கம்

 ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் நிறுவனத்தின் தலைவரும் தலைமை ஆட்சியரும், கணினித் துறையின் குறிப்பிடத்தக்க ஓர் ஆளுமையாளரும் ஆவார். இவர் பிப்ரவரி 24, 1955ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் 1985 ஆம் ஆண்டில், அமெரிக்க நாட்டரசு, அவர்களின் குடியரசுத் தலைவரால் வழங்கிப் பெருமை செய்யும் அந்நாட்டின் தலையாய பரிசாகிய தொழில்நுட்பத்துக்கும் புதுமையாக்கத்துக்குமான பதக்கத்தை வென்றார். ஸ்டீவ் ஜாப்ஸ், 1976 இல் ஆப்பிள் கம்பியூட்டர் நிறுவனத்தைத் தொடங்கியவர்களுள் ஒருவர். இவர் பிக்ஃசார் அசைபட நிறுவனத்தின் (Pixar Animation Studios) தலைமை ஆட்சியராகவும், வால்ட் டிசினி (Walt Disney) போன்ற பல நிறுவனங்களின் ஆட்சிப் பேராய இயக்குநர்களில் ஒருவராகவும் இருந்தார். ஆகஸ்ட் 24, 2011 அன்று உடல்நிலை காரணமாக தலைவர் பதவியிலிருந்து விலகினார். இவரையடுத்து டிம் குக் பொறுப்பேற்றார். 

 ஸ்டீவ் ஜாப்ஸ், 1970களின் பிற்பகுதியில் இசுட்டீவ் வோசினியாக் மார்க் மார்குலா ஆகியோருடன் சேர்ந்து ஆப்பிள் நிறுவனத்தை நிறுவினார். 1980களின் முற்பகுதியில் ஆப்பிள் நிறுவனத்தின் திறம்மிக்க மாக்கிண்ட்டாசு கணினியை அறிமுகப்படுத்தினார். நிறுவன உள்பிணக்குகளால் 1985 இல் ஆட்சிப் பேராயத்தாருடன் மோதி, ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து வெளியேறி உயர்கல்வி நிறுவனத் தேவையை முதன்மைப்படுத்தி நெக்ஸ்ட் என்னும் கணினித்தளம் நிறுவனத்தை உருவாக்கினார். ஆனால் 1996 இல் ஆப்பிள் நிறுவனம் நெக்ஃசிட்டு நிறுவனத்தை வாங்கிய பின், ஸ்டீவ் ஜாப்ஸ் தான் உடன் நின்று உருவாக்கிய ஆப்பிள் நிறுவனத்திலேயே சேர்ந்தார். அங்கு முதன்மை செயலாட்சியராக (CEO) 1997முதல் 2011 வரை நீடித்தார். 

 ஸ்டீவ் ஜாப்ஸ், திருமணம் ஆகாத இரண்டு பல்கலைக்கழ மாணவர்களுக்குப் பிறந்தார். இவரின் பெற்றோர் சோஆன் சீப்லெ, சிரியா நாட்டினரான அப்துல்ஃவட்டா சண்டாலி ஆகியோர். ஆனால் கலிபோரினியாவில் இருந்த இரண்டு தொழிலாளக் குடும்ப இணையர் பால் ஜொப்ஸ், கிளாரா ஜொப்ஸ் ஆகியோர் தத்து எடுத்து வளர்த்து ஆளாக்கினர். 1974ம் ஆண்டு ஆன்மீக அமைதி தேடி ஸ்டீவ் ஜாப்ஸ் இந்தியா வந்தார். பின், உத்திர பிரதேசத்தில் உள்ள கைஞ்சி ஆசிரமத்திற்கு தனது கல்லூரி நண்பருடன் சென்று நீம் கரோலி பாபாவை தரிசனம் செய்தார். அவரது போதனைகளில் மனம் மாறிய ஜாப்ஸ், அவரை தன்னுடைய ஆன்மிக குருவாக ஏற்றுக்கொண்டார். அதுவே அவர் புத்த மதத்தை தழுவ காரணமாக இருந்தது. கம்ப்யூட்டர் வல்லுநர் என அறியப்பட்ட ஸ்டீவ் ஜாப்ஸ், சிறந்த பேச்சாளர். 2005ஆம் ஆண்டு ஜூன் 12ம் தேதி கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அவரது பேச்சு பலராலும் பாராட்டப்பட்டது. 

 பத்து ஆண்டு உழைப்பின் பயனாக, மெகின்டோஷ் கம்ப்யூட்டரை வடிவமைத்தேன். எனது முதல் கம்ப்யூட்டர், டைப்போகிராபி கொண்டது. 20 வயதில் என் வீட்டில் ஆப்பிள் நிறுவனத்தை துவக்கினேன். 10 ஆண்டு உழைப்பிற்கு பின் 2 பில்லியன் டாலர்களுடன் 4,000 பேரை வேலையில் அமர்த்தியது என் நிறுவனம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் நெக்ஸ்ட் மற்றும் பிக்ஸர் ஆகிய நிறுவனங்களை துவக்கினேன். சில காலம் கழித்து ஆப்பிள் நிறுவனம், நெக்ஸ்ட்டை வாங்கியது. நான் மறுபடியும் புதிய உத்வேகத்துடன் ஆப்பிளில் இணைந்தேன். 


 2007-ல் அப்பிள் நிறுவனத்தினை கையடக்கத் தொலைபேசி உலகத்திற்குள் ஐபோனுடன் கொண்டு சென்றார். இது கையடக்கடத் தொலைபேசி வரலாற்றில் கவனிக்கத்தக்க படைப்பாக உருவானது. அப்பிள் நிறுவனத்திற்காகவே வாழ்ந்து, பல்கலைக்கழகத்திற்கு செல்லாமல் தானே ஒரு பல்கலைக்கழகம் என நிரூபித்துக்காட்டிய அந்த மாமனிதருக்கு கிராபி சொப்ட் நிறுவனம் அவரை கௌரவிக்கும் வகையில் ஹங்கேரியின் தலைநகரான புடாபெஸ்டிலுள்ள கிராபி சொப்ட் சயன்ஸ் பார்க்கில் வெண்கலத்தினாலான 6. 5 அடி உயரமான சிலை ஒன்று முதன் முதலாக 2011ஆம் டிசம்பர் மாதம் நிறுவப்பட்டது. 


அவருக்கு கணையத்தில் புற்றுநோய் இருப்பது, பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் குறைவு. அதை வீணாக்காதீர்கள். மற்றவர்கள் கூறிய கருத்துகளை வேதவாக்காக கொண்டு, வாழ்க்கையை நிர்ணயிக்காதீர்கள். உள்ளுணர்விற்கு மதிப்பளியுங்கள். பசியோடு இருங்கள்; புதிய சிந்தனைகளோடு வாழுங்கள். இந்த வாசகத்துடன் உரையை முடித்தார்.

New inventions of steve

Famous quotes 

Steve house

Steve friends 

Young age pictures 


steve jobs Designer of New world

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Thanjai Periya Kovil — A Historical Treasure! — தஞ்சைப் பெருவுடையார் கோயில் ஒரு வரலாற்று பொக்கிசம்!

Thanjai Periya Kovil — A Historical Treasure! — தஞ்சைப் பெருவுடையார் கோயில் ஒரு வரலாற்று பொக்கிசம்! Tamilsolai Thanjai Periya Kovil ‘Brihadeeswara Kovil’ is not a Tamil name at all, but it is a Sanskrit name. How did the Tamil Kovil get a Sanskrit name? Briha means மிகப்பெரிய — Mihapperiya (huge) and Eswara means God Sivan. It was named so when Maratha Kings ruled Thanjai during 17th-18th Centuries. But, the real name of the Thanjai Periya Kovil is Thanjai Peruvudaiyar Kovil (தஞ்சைப் பெருவுடையார் கோயில்). Not only the name alone Tamil, This is a fully Tamil Kovil. You will be wondered if you hear the true story. The height of the Lingam in the sanctum of the temple is 12 feet which is equal to the number of Tamil vowels. The height of the Linga pedestal is 18 feet which is equal to the number of Tamil consonants. The height of the Temple Gopuram is 216 feet which is equal to the number of Consonantal-vowels. The distance between the Lingam in the sanctum of the temple and the Nandi...

இடையூறுகளை முறியடித்து கடக்கும் வலிமை கொண்டது தி.மு.க.,: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

 சென்னை: தி.மு.க., இடையூறுகள், அவதூறுகள் எதுவாக இருந்தாலும் அவற்றை முறியடித்துக் கடக்கும் வலிமை கொண்டது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவரது கடிதம்: எல்லார்க்கும் எல்லாம் என்கிற திராவிட மாடல் அரசின் மகத்தான திட்டங்கள் எல்லா மக்களுக்கும் சென்று சேர்கிறதா என்பதை நேரில் அறிந்து கொள்ளும் வகையில் மாவட்டங்கள் தோறும் ஆய்வுக் கூட்டங்களை நான் மேற்கொண்டு வருகிறேன். சாலையில் இறங்கி நடந்து, அவர்களுடன் கைகுலுக்கியும் செல்பி எடுத்தும் இருதரப்பிலும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்களுடனான சந்திப்புகள் நடைபெறுகின்றன. காழ்ப்புணர்ச்சி இது வெறும் ரோடு 'ஷோ' அல்ல. திராவிட மாடல் அரசுக்கும் மக்களுக்கும் உள்ள பிணைப்பைக் காட்டுகின்ற அன்புக் கூடல். நேர்மையான விமர்சனங்களைக் கவனித்துச் சரிப்படுத்த வேண்டிய செயல்களை மேற்கொள்வது என் வழக்கம். காழ்ப்புணர்வின் காரணமாக விமர்சனம் என்ற பெயரில் முன்வைக்கப்படும் அவதூறுகளைப் புறந்தள்ளிவிடுவதே என் பழக்கம். ஆறாவது முறையாக தி.மு.க., தமிழகத்தை ஆள்கிறது. 7வது முறையும் ஆட்சி அமையும்.மக்களுக்கான திராவிட மாடல் அரசின் திட்டங்களும் சாதனைகள...

விழுப்புரம் – TNPSC Group 2 முதன்மைத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் Nov 20 முதல்! | District Employment Office Update

  விழுப்புரம் – TNPSC Group 2 முதன்மைத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் Nov 20 முதல்! | District Employment Office Update     விழுப்புரம் மாவட்ட   வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ,  TNPSC Group 2 முதன்மைத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்   நவம்பர் 20, 2025 முதல் தொடங்க உள்ளது என்று மாவட்ட ஆட்சியர்   ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான்   அறிவித்துள்ளார். Quick Info ·         🏛   அமைப்பு:   விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் ·         📚   பயிற்சி:  TNPSC Group 2 Mains இலவச வகுப்பு ·         📅   தொடக்கம்:  20.11.2025 ·         📝   Registration Last Date:  19.11.2025 ·         🧑 ‍ 🏫   எப்படி பதிவு ?  – நேரில் சென்று பெயர் பதிவு ·     ...