முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முகேஷ் அம்பானியின் அறியபடாத ரகசியங்கள்

 முகேஷ் அம்பானி என்று அழைக்கப்படும் “முகேஷ் திருபாய் அம்பானி” அவர்கள் இந்தியாவின் நவீனத் தொழில்துறை முன்னோடிகளில் குறிப்பிடத்தக்க ஒருவராவார். “இந்திய வர்த்தக உலக ஜாம்பவான்” எனப் போற்றப்படும் “திருபாய் அம்பானியின்” மகன் ஆவார். முகேஷ் அம்பானி அவர்கள், 1957 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள மும்பையில் திருபாய் அம்பானிக்கும் கோகிலாபென் அம்பானிக்கும் மூத்த மகனாகப் பிறந்தார். இவருக்கு அனில் அம்பானி என்ற சகோதரரும், தீப்தி சல்கோன்கர் மற்றும் நீனா கோத்தாரி என்ற இரண்டு சகோதரிகளும் உள்ளனர். இவருடைய சொந்த ஊர் ஜீனாகட் மாவட்டத்திலுள்ள சோர்வாட் ஆகும். முகேஷ் அம்பானியின் தந்தை திருபாய் அம்பானி அவர்கள் இந்தியாவின் தனியார்துறை நிறுவனங்களில் மிகவும் பெரிய நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை உருவாக்கியவர் ஆவார். 

 தன்னுடைய ஆரம்பக் கால கல்வியை மும்பையில் உள்ள அபே மொரிச்சா பள்ளியில் தொடங்கி இவர், பின்னர் மும்பை பல்கலைக்கழகத்தில் இரசாயன பொறியியல் துறையில் பி. இ பட்டம் பெற்றார். அதன் பிறகு, இரண்டு ஆண்டு எம். பி. ஏ படிக்க அமெரிக்கா பயணமான முகேஷ் அவர்கள், கலிஃபோர்னியாவில் உள்ள இஸ்டான்ஃபர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தார். ஒரு ஆண்டு மட்டுமே நிறைவடைந்த நிலையில் 1980-இல் தன்னுடைய படிப்பைக் கைவிட்டு இந்தியா திரும்பினார். 


 தந்தையின் பொறுப்புகள் அதிகமானதால், தன்னுடைய எம். பி. ஏ படிப்பை ஓராண்டோடு முடித்துக்கொண்டு, தந்தைக்கு உதவியாக ரிலையன்சின் ஒருங்கிணைந்த நெசவு தொழிலிருந்து பாலிஸ்டர் இழைகள் உற்பத்தி மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் துறையின் பொறுப்புகளை ஏற்றார். 


 ரிலையன்ஸ்சின் ஒருங்கிணைந்த நெசவு தொழிலிருந்து பாலிஸ்டர் இழைகள் உற்பத்தி எனத் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கிய இவர், 1981 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றார். அதன் பிறகு பெட்ரோலிய சுத்திகரிப்பு, எண்ணெய் சுத்திகரிப்பு, எரிவாயு ஆராய்ச்சி என மேலும் பல தொழில் அமைப்புகளைத் தொடங்கி தன்னுடைய வர்த்தகத்தை விரிவுபடுத்தினார். 

அதுமட்டுமல்லாமல், உலகில் மிகப்பெரிய மற்றும் பல பாகங்களைக் கொண்ட தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப முயற்சிகளைக் கொண்ட “இன்ஃபோகாம் நிறுவனத்தை” (தற்பொழுது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட்) நிறுவினார். பின்னர், அடித்தள பெட்ரோலிய சுத்திகரிப்பு நிறுவனத்தை ஜாம் நகரில் நிறுவி, அதன் உற்பத்தித் திறனை பன்மடங்கு அதிகப்படுத்தினார். மேலும், இதனுடன் ஒருங்கிணைக்கப்பட்ட பெட்ரோகெமிக்கல், மின் உற்பத்தி, துறைமுகம் மற்றும் உள்கட்டமைப்பு அடிப்படை வசதிகளின் நிர்வாக இயக்குனராகவும், அதனை வழிநடத்துபவராகவும் செயல்பட்டார். 

 தந்தை திருபாய் அம்பானியின் இறப்பிற்குப் பிறகு, ரிலையன்ஸ் நிறுவனத்தை முகேஷ் அம்பானிதான் ஆளப்போகிறவர் என்று அனைவரும் நினைத்திருந்த தருணத்தில், அவருடைய சகோதரர் அனில் அம்பானியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மற்றும் பெட்ரோகெமிக்கஸ் நிறுவனம் முகேஷிடமும், ரிலையன்ஸ் கேபிடல், ரிலையன்ஸ் எனர்ஜி மற்றும் ரிலையன்ஸ் இன்ஃபோகாம் ஆகிய நிறுவனங்கள் அனில் அம்பானியிடமும் பிரித்துக்கொடுக்கப்படது. 

 முகேஷ் அம்பானி அவர்கள், நீதா அம்பானி என்ற பெண்மணியைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இஷா என்ற மகளும், ஆனந்த் மற்றும் ஆகாஷ் என்ற மகன்களும் உள்ளனர். இவர்கள் மும்பையில் அண்டிலியா என்ற 27 மாடி கட்டிடம் கொண்ட மிகவும் விலையுயர்ந்த வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த வீட்டின் மதிப்பு அமெரிக்க டாலரில் 2 பில்லியன்கள் ஆகும். 


 2007 ஆம் ஆண்டு இந்தியப் பங்குச் சந்தையில் ஏற்பட்ட மதிப்புயர்வு காரணமாக இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்ததால், ரிலையன்ஸ் குழு நிறுவனங்களின் மதிப்பும் அதிகரித்ததின் காரணமாக இவர், “உலக பணக்கார மனிதர்” எனவும் அறியப்படுகிறார். 

2010 ஆம் ஆண்டில் இவர்


♦ ஆசியா பொதுநல ஸ்தாபன அமைப்பின் மூலம் பிரதான விருந்தில் “குளோபல் விஷன் விருது”. 


♦ என். டி. டி. வி (இந்தியா) “சிறந்த வர்த்தக தலைவர் விருது”. 


♦ பைனான்சியல் குரோனிக்கிள் அமைப்பின் “தொழிலதிபர் விருது”. 


♦ பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் மூலம் “பொறியியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழக பள்ளித்தலைவர் பதக்கம்”. 


♦ அமெரிக்க இந்திய வர்த்தக ஆலோசனை சபை மூலம் “அமெரிக்க இந்திய வர்த்தக கவுன்சிலின் தலைவர் விருது” பெற்றுள்ளார். 


♦ 2010 - ஐ. எம். சி அமைப்பின் மூலம் 2009 ஆம் ஆண்டிற்கான “ஜுரான் தர பதக்கம்”. 


♦ குஜராத் அரசிடம் இருந்து 2007 ஆம் ஆண்டிற்கான “சித்திரலேகா நபர் விருது”. 

  ஆசியாவின் 2-வது பணக்கார மனிதராகவும், உலகின் 19 வது பணக்கார மனிதராகவும் கணிக்கப்பட்டு, அப்பட்டியலில் இடம்பெற்றார். அதுமட்டுமல்லாமல், இவர் அமெரிக்க கார்ப்பரேஷன் வங்கியின் இயக்குனர்கள் குழுவில் ஒரு உறுப்பினராகவும், சர்வதேச வெளியுறவு ஆலோசனை குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். திருபாய் அம்பானிக்குப் பிறகு ரிலையன்ஸின் இன்னொரு முகமாகவே தன்னை வெளிப்படுத்தி, உலகப் பணக்காரர்களின் பட்டியலில் தன் பெயரை பதிவு செய்து, தற்பொழுது, இந்தியத் தனியார் தொழில்துறையில் மாபெரும் சக்ரவர்த்தியாக விளங்கிறார் முகேஷ் அம்பானி. 








கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழுப்புரம் – TNPSC Group 2 முதன்மைத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் Nov 20 முதல்! | District Employment Office Update

  விழுப்புரம் – TNPSC Group 2 முதன்மைத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் Nov 20 முதல்! | District Employment Office Update     விழுப்புரம் மாவட்ட   வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ,  TNPSC Group 2 முதன்மைத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்   நவம்பர் 20, 2025 முதல் தொடங்க உள்ளது என்று மாவட்ட ஆட்சியர்   ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான்   அறிவித்துள்ளார். Quick Info ·         🏛   அமைப்பு:   விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் ·         📚   பயிற்சி:  TNPSC Group 2 Mains இலவச வகுப்பு ·         📅   தொடக்கம்:  20.11.2025 ·         📝   Registration Last Date:  19.11.2025 ·         🧑 ‍ 🏫   எப்படி பதிவு ?  – நேரில் சென்று பெயர் பதிவு ·     ...

Evening Wheat by Vikram Seth: A Complete Literary Analysis of Themes, Symbolism & Poetic Devices

  Evening Wheat by Vikram Seth is a beautifully crafted poem that captures the peaceful beauty of rural India during sunset. Through simple yet vivid language, Vikram Seth paints a picture of village life, golden wheat fields, and the harmony between nature and humans. The poem highlights everyday rural activities while celebrating the richness of agricultural life. This poem is admired for its imagery, symbolism, and emotional depth. It also reflects Seth’s neo-formalist style, combining traditional poetic techniques with modern themes. About Vikram Seth Vikram Seth is one of India’s most celebrated contemporary writers. He is known for writing novels, poetry, travel writing, and translations. Quick Facts Born: 20 June 1952 Birthplace: Kolkata, India Occupation: Poet, Novelist, Travel Writer Language: English Writing Style: Neo-Formalism Famous Works: A Suitable Boy The Golden Gate An Equal Music Mappings The Humble Administrator’s Garden His works beautifully combine Indian...

Thanjai Periya Kovil — A Historical Treasure! — தஞ்சைப் பெருவுடையார் கோயில் ஒரு வரலாற்று பொக்கிசம்!

Thanjai Periya Kovil — A Historical Treasure! — தஞ்சைப் பெருவுடையார் கோயில் ஒரு வரலாற்று பொக்கிசம்! Tamilsolai Thanjai Periya Kovil ‘Brihadeeswara Kovil’ is not a Tamil name at all, but it is a Sanskrit name. How did the Tamil Kovil get a Sanskrit name? Briha means மிகப்பெரிய — Mihapperiya (huge) and Eswara means God Sivan. It was named so when Maratha Kings ruled Thanjai during 17th-18th Centuries. But, the real name of the Thanjai Periya Kovil is Thanjai Peruvudaiyar Kovil (தஞ்சைப் பெருவுடையார் கோயில்). Not only the name alone Tamil, This is a fully Tamil Kovil. You will be wondered if you hear the true story. The height of the Lingam in the sanctum of the temple is 12 feet which is equal to the number of Tamil vowels. The height of the Linga pedestal is 18 feet which is equal to the number of Tamil consonants. The height of the Temple Gopuram is 216 feet which is equal to the number of Consonantal-vowels. The distance between the Lingam in the sanctum of the temple and the Nandi...