சுந்தர் பிச்சை என்று அறியப்படும் பிச்சை சுந்தரராசன் (பி. 12 சூலை 1972), ஓர் அமெரிக்க வாழ் கணினி தொழில்நுட்ப மேலாளர் ஆவார். இவரை கூகுளின் அடுத்த முதன்மை செயல் அலுவலராக ஆகஸ்ட் 10, 2015 அன்று கூகுள் அறிவித்தது. மைக்ரோசாஃப்டின் அடுத்த சி. இ. ஓ. பந்தயத்தில் இவரும் இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் நாட்டில் உள்ள சென்னையில் பிறந்த இவர், பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் படித்தவர். அதன் பிறகு ஐ. ஐ. டி. கரக்பூரில் பொறியியல் பட்டமும், ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் எம். எஸ் பட்டமும், பென்சில்வேனியாவில் இருக்கும் வார்டன் கல்லூரியில் எம். பி. ஏ. பட்டமும் பெற்றவர்.
2004-ம் ஆண்டு முதல் கூகுள் நிறுவனத்தில் பணிபுரிகிறார். தற்போது தலைமை துணைத்தலைவராக இருக்கும் இவர், ஆண்ட்ராய்ட், கூகுள் குரோம் உள்ளிட்ட பிரிவுகளைக் கவனித்துக்கொள்கிறார். 2013 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் நாள் ஆன்டி ரூபின் பதவி விலகிய பிறகு ஆண்ட்ராய்டு பிரிவிற்கும் சேர்த்து தலைவரானார். கூகுள் வரைபடம், ஆய்வு, வணிகம், விளம்பரம், ஆண்ட்ராய்டு, குரோம், உள்கட்டமைப்பு, கூகுள் ஆப்ஸ் ஆகியவற்றின் தலைவராக இருந்த இவர், கூகுள் உறவு நிறுவனங்களின் புதிய கூட்டு நிறுவனமான ஆல்பாபெட்டு உருவாக்கம் நிறைவுற்ற பிறகு, கூகுளின் முதன்மைச் செயல் அலுவலராகப் பொறுப்பேற்க உள்ளார். கூகுள் நிறுவனத்தில் சேருவதற்கு முன்பு மெக்கென்சி நிறுவனத்தின், சாஃப்ட்வேர் நிறுவனங்களுக்கு கன்சல்டன்டாக இருந்திருக்கிறார்.
Sundar pichai office
Sundar pichai wife
Sundar pichai House
0 கருத்துகள்