முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Story of Tamil Faire Queen

ஓரிடத்தில் இருந்த எலி, முயல், குரங்கு, வெட்டுக்கிளி ஆகியவை ஒன்றுடன் ஒன்று நன்றாகப் பழகி வந்தன. ஆனால் அவைகளுக்குள் அழகு குறித்து அடிக்கடி விவாதங்கள் எழும். ஒவ்வொன்றும் தன் பெருமையைப் பறைசாற்றும் விதத்தில் பேசும். முயல் மட்டும் மவுனமாக இருக்கும்.


`நம் நால்வரில் நான் தான் மிக அழகு! மனிதர்கள் கூட எங்கள் இனத்திலிருந்துதான் தோன்றியதாகச் சொல்வார்கள்!' குதித்து குதித்து நடன மாடியபடி சொல்லியது குரங்கு.


`நாங்கள் மனிதர்களின் வீட்டுக்குள்ளே புத்திசாலித்தனமாக ஒளிந்தும் வாழ்கிறோம்! எங்களிடம் அழகும் அறிவும் இருக்கிறது. எனவே நான்தான் அழகு தேவதை!' என்றது எலி.


`மனிதர்கள் திட்டும் போது குரங்கு முகம், எலி முகம் என்று கூட உங்களைப் பற்றிக் கூறுவார்கள்! நான் சிறிய உருவமாக இருந்தாலும் கிளியின் நிறத்தில் அதைப் போன்றே அழகாக இருக்கிறேன்!' பெருமிதம் பொங்கக் கூறியது வெட்டுக்கிளி.


`நான் இந்த அழகுப் போட்டிக்கே வர வில்லை!' முயல் சொல்ல, மூன்றும் சேர்ந்து சிரித்தன. முயல் மெதுவாக அவ்விடத்தை விட்டு அகன்றது.


`என்ன இருந்தாலும் வெள்ளை வெளேரென்று முயல் ஓடி வரும் அழகே தனிதான்!' குரங்கு சொல்லியது.


`ஆமாம்... ஆமாம்...!' ஒப்புக் கொண்டது வெட்டுக்கிளி.


`நிறமும் அழகும் மட்டும் இருந்தால் போதுமா? அறிவு, புத்திசாலித்தனம் எல்லாம் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அழகியாக ஏற்றுக் கொள்ள முடியும்' என்றது எலி.


`எனக்கொரு யோசனை தோன்றுகிறது! நமக்குள்ளே ஓர் அழகிப் போட்டி நடத்தினால் என்ன?' கேட்டது வெட்டுக்கிளி.


`போட்டி நடத்தலாம். ஆனால் நடுவர் யார்?' சந்தேகம் எழுப்பியது எலி.


`நடுவராக நானிருக்கிறேன்!' திடீரென்று ஒரு சப்தம் கேட்டது. அனைத்தும் மேலே பார்க்க, மரத்தின் மீது ஒரு காகம் இருந்தது.


`நீங்கள் எப்படி?' ஆச்சரியப்பட்டது குரங்கு.


`நீங்கள் மூவரும் பேசிக் கொண்டிருந்ததை நான் கேட்டேன். முயலை யும் அழைத்துக் கொண்டு நாளை என் இருப்பிடம் தேடி வாருங்கள். ஆனால் நான் தேர்ந்தெடுப்பவரை அழகு ராணியாக அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ள வேண்டும்!' என்று காகம் தன் முகவரி கூறியது.


`அப்படியே செய்கிறோம்...' அனைத் தும் சேர்ந்து குரல் கொடுத்தன.


மறுநாள் அனைத்தும் அழகிய அழகுராணி கனவில் மிதந்து காகத்தைத் தேடி போய்க் கொண்டு இருந்தன.


அப்பொழுது குருவி ஒன்று வலியால் துடித்துக் கொண்டிருந்தது. அதன் கால்களில் காயம் தெரிந்தது.


`எனக்கு யாராவது ஒருவர் உதவி செய்யுங்களேன். ஒரு சிறுவன் கல்லெடுத்து எறிந்து காலில் காயப்படுத்தி விட்டான்!' குருவி பல கீனமாக உதவி கேட்டது.


`நாங்கள் அழகிப் போட்டிக்குப் போய்க் கொண்டு இருக்கிறோம். அபசகுனமாக பேசாதே!' கடுமையாக கூறியது குரங்கு.


குருவியைப் பார்த்த எலியும், வெட்டுக்கிளியும் முகம் திருப்பி சென்று விட்டன. முயல் குருவி அருகே தயங்கி நின்றது. பின்னர் அவசர அவசரமாக மருந்து தேடிக் காலில் வைத்து விட்டு அழகிப்போட்டிக்கு சென்றது.


அழகிப் போட்டி தொடங்கியது. குறித்த நேரத்திற்கு முயல் மட்டும் செல்லவில்லை. மீதி மூன்றும் மனசுக்குள் மகிழத் தொடங்கின.


`அழகுக்கும் அறிவுக்கும் மதிப்பெண் போட்டு விட்டேன். இனி உங்கள் நல்ல குணம் பார்த்து மதிப்பெண்கள் கொடுப்பேன்! இதற்குத்தான் அதிக மதிப்பெண்கள் ஒதுக்கி இருக்கிறேன்!' காகம் கூறியதும் குருவிக்கு உதவாத மூன்றும் ஒன்றையொன்று பார்த்துக் கொண்டன.


அப்பொழுது அரக்கப் பரக்க முயல் ஓடி வந்தது.


`முயல்தான் அழகு ராணி! இதை அழகுராணியாகத் தேர்வு செய்வதற்காக நான் பெருமைப் படுகிறேன்! குருவி என் நண்பன்தான்! ஒரு ஆபத்திலிருந்து முயல் காப்பாற்றியதாக சற்று முன்பு தான் குருவி கூறியது. அப்பொழுது மூவரும் உதவாமல் சென்றது பற்றியும் சொல்லி வருத்தப்பட்டது! உதவும் நல்ல மனசு உள்ளவர்கள்தான் உண்மையில் அழகானவர்கள்!' காகம் கூறியதும் எலி, வெட்டுக்கிளி, குரங்கு ஆகியவற்றின் முகங்கள் அஷ்டகோணலாகின.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Thanjai Periya Kovil — A Historical Treasure! — தஞ்சைப் பெருவுடையார் கோயில் ஒரு வரலாற்று பொக்கிசம்!

Thanjai Periya Kovil — A Historical Treasure! — தஞ்சைப் பெருவுடையார் கோயில் ஒரு வரலாற்று பொக்கிசம்! Tamilsolai Thanjai Periya Kovil ‘Brihadeeswara Kovil’ is not a Tamil name at all, but it is a Sanskrit name. How did the Tamil Kovil get a Sanskrit name? Briha means மிகப்பெரிய — Mihapperiya (huge) and Eswara means God Sivan. It was named so when Maratha Kings ruled Thanjai during 17th-18th Centuries. But, the real name of the Thanjai Periya Kovil is Thanjai Peruvudaiyar Kovil (தஞ்சைப் பெருவுடையார் கோயில்). Not only the name alone Tamil, This is a fully Tamil Kovil. You will be wondered if you hear the true story. The height of the Lingam in the sanctum of the temple is 12 feet which is equal to the number of Tamil vowels. The height of the Linga pedestal is 18 feet which is equal to the number of Tamil consonants. The height of the Temple Gopuram is 216 feet which is equal to the number of Consonantal-vowels. The distance between the Lingam in the sanctum of the temple and the Nandi...

இடையூறுகளை முறியடித்து கடக்கும் வலிமை கொண்டது தி.மு.க.,: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

 சென்னை: தி.மு.க., இடையூறுகள், அவதூறுகள் எதுவாக இருந்தாலும் அவற்றை முறியடித்துக் கடக்கும் வலிமை கொண்டது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவரது கடிதம்: எல்லார்க்கும் எல்லாம் என்கிற திராவிட மாடல் அரசின் மகத்தான திட்டங்கள் எல்லா மக்களுக்கும் சென்று சேர்கிறதா என்பதை நேரில் அறிந்து கொள்ளும் வகையில் மாவட்டங்கள் தோறும் ஆய்வுக் கூட்டங்களை நான் மேற்கொண்டு வருகிறேன். சாலையில் இறங்கி நடந்து, அவர்களுடன் கைகுலுக்கியும் செல்பி எடுத்தும் இருதரப்பிலும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்களுடனான சந்திப்புகள் நடைபெறுகின்றன. காழ்ப்புணர்ச்சி இது வெறும் ரோடு 'ஷோ' அல்ல. திராவிட மாடல் அரசுக்கும் மக்களுக்கும் உள்ள பிணைப்பைக் காட்டுகின்ற அன்புக் கூடல். நேர்மையான விமர்சனங்களைக் கவனித்துச் சரிப்படுத்த வேண்டிய செயல்களை மேற்கொள்வது என் வழக்கம். காழ்ப்புணர்வின் காரணமாக விமர்சனம் என்ற பெயரில் முன்வைக்கப்படும் அவதூறுகளைப் புறந்தள்ளிவிடுவதே என் பழக்கம். ஆறாவது முறையாக தி.மு.க., தமிழகத்தை ஆள்கிறது. 7வது முறையும் ஆட்சி அமையும்.மக்களுக்கான திராவிட மாடல் அரசின் திட்டங்களும் சாதனைகள...

விழுப்புரம் – TNPSC Group 2 முதன்மைத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் Nov 20 முதல்! | District Employment Office Update

  விழுப்புரம் – TNPSC Group 2 முதன்மைத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் Nov 20 முதல்! | District Employment Office Update     விழுப்புரம் மாவட்ட   வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ,  TNPSC Group 2 முதன்மைத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்   நவம்பர் 20, 2025 முதல் தொடங்க உள்ளது என்று மாவட்ட ஆட்சியர்   ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான்   அறிவித்துள்ளார். Quick Info ·         🏛   அமைப்பு:   விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் ·         📚   பயிற்சி:  TNPSC Group 2 Mains இலவச வகுப்பு ·         📅   தொடக்கம்:  20.11.2025 ·         📝   Registration Last Date:  19.11.2025 ·         🧑 ‍ 🏫   எப்படி பதிவு ?  – நேரில் சென்று பெயர் பதிவு ·     ...