ஒரு பெரிய மடாலயத்தில் சீடர்கள் வட்டமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கையில் ஒரு வாக்குவாதம் எழுந்தது. அது என்னவென்றால், "திருடனாக இருப்பவனுக்கு எப்போதும் கெட்டது தான் நடக்கும்" என்று ஒரு பக்கமும், இன்னொரு பக்கம் "இல்லை, நல்லதும் நடக்கும்" என்றும் வாதாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களது குரலைக் கேட்டு வந்த ஜென் மாஸ்டர், என்ன பிரச்சனை என்று கேட்டார். அதற்கு அவர்கள் அந்த வாக்குவாதத்தை கூறினர். ஆகவே அதில் உள்ள உண்மையை புரிய வைப்பதற்கு, அவர்களுக்கு ஒரு கதையைக் கூற ஆரம்பித்தார். அது என்னவென்றால், "ஜென்கை என்பவன் ஒரு சாமுராய் மகன். அவன் 'எடோ' என்ற இடத்திற்கு பயணித்தார். அங்கு ஒரு உயர் அதிகாரியிடம் பணியாளாக சேர்ந்து, அவரின் மனைவியை காதலித்து, மேலும் தற்காப்பிற்காக, அந்த அதிகாரியின் பெருந்தொகையை எடுத்துக் கொண்டு, அவருடைய மனைவியுடன் ஓடிவிட்டான். பின்னர், இருவரும் நன்கு சந்தோஷமாக வாழ்வதற்கு திருடர்களாக மாறினர். ஆனால் அந்த பெண், ஜென்கையின் நடவடிக்கைகளை கண்டு வெறுப்படைந்தாள். அதனால் அவள் அவனை விட்டு சென்று விட்டாள். ஆகவே மனமுடைந்த அவன் 'பூசன்' என்ற மாகாணத...
Tamilsolai covers Tamil Nadu & Chennai - News, Politics, Current Affairs, City Life, Tamil Movies, Personality Interviews, Movie Reviews, Events, ...